search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான் பிரான்சிஸ்கோ"

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் குறைவான வருமானமாக கருதப்படுகிறது. #America #SanFrancisco
    நியூயார்க்:

    இந்தியாவில் 5 இலக்க எண்களில் சம்பளம் வாங்குவதுதான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இலட்சியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆண்டு வருமானம் 80 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதாக வெளியிடப்பட்ட அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் அந்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு வாழ்வதற்கான இயற்கை சூழலும், பாதுகாப்புடன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையும் உள்ளது.

    அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் வசிக்கும் பகுதியும் சான் பிரான்சிஸ்கோதான். இங்கு ஆண்டு வருவாய் 80 லட்சத்துக்கும் மேலாக இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. 80 லட்ச ரூபாய் வருமானம் பெருபவர்களை ஏழைகள் என்றும், அதற்கு குறைவாக 60 லட்ச ரூபாய் அளவில் வருமானம் பெருபவர்கள் மிக ஏழைகள் எனவும் அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

    குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 17.19 லட்சம் ரூபாய் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பண்ணை தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாயாகவும், குழந்தை பராமரிப்பு வேலை பார்ப்பவர்களுக்கு சுமார் 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் பிற பகுதிகளை காட்டிலும், இங்கு வருமான வரையறையில் வேறுபாடு காணப்படுகிறது. ஏனெனில், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகையே சுமார் 2.13 லட்ச ரூபாயாம்!

    இங்கு கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே நடுத்தர வசதி படைத்தோராக கருதப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகும். #America #SanFrancisco
    ×